கேரள மாநிலம் காசர்கோடில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாணவேடிக்கை விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அஞ்சோடம்பலம் வீரர்காவு கோவிலின் வருடாந்த காளியாட்டம் திருவிழாவின் போது நள்ளிரவு 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் காசர்கோடு, கண்ணூர், மங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிலுக்கு அருகில் உள்ள பட்டாசு ஆலையில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து பற்றிய தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைத் தலைவர் உட்பட பல உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் காயம்
