கிர்கிஸ்தான் தலைமையமைச்சர் அக்பெக் ஜாபரோவ் சீனாவின் சி.ஜி.டி.என்.க்கு சிறப்பு நேர்காணல்

Estimated read time 1 min read

அண்மையில், கிர்கிஸ்தான் தலைமையமைச்சர் அக்பெக் ஜாபரோவ் சீனாவின் சி.ஜி.டி.என்.க்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

சீனா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் ரயில் பாதை குறித்து அவர் கூறுகையில்,

கிர்கிஸ்தான் சுதந்திரம் அடைந்த 30 ஆண்டுகளில், அந்நாட்டில் புதிய ரயில் பாதை கட்டியமைக்கப்படவில்லை. ஆனால் தற்போது, சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெக்ஸ்தான் ரயில் பாதை மூலம், எல்லை கடந்த சரக்கு சேவையில் மாபெரும் ஆற்றல் கொண்ட ஒரு நாடாக கிர்கிஸ்தான் மாறும். ஷாங்காய், பாரிஸ் ஆகிய இரு மாநகரங்களையும் இணைக்கும் மிக குறைந்த தொலைவு கொண்ட வழியாக, இந்த ரயில் பாதை மாறும். அதேவேளையில், உலகில் இரண்டு பெரிய பொருளாதாரப் பகுதிகளான சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே, கிர்கிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசியப் பிராந்தியம் ஒரு முக்கிய தரைவழியாகவும் அமையும் என்று தெரிவித்தார்.

தவிர, கிர்கிஸ்தானில் தனது ஆற்றலுடன், சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பேக்ஸ்தான் ரயில் பாதைக்கு முதலாவது பரிமாற்ற நிலையத்தைக் கட்டுவோம். இனி, இந்த ரயில் பாதையில் கொண்டு செல்லப்படும் சரக்குகள், இரு திசையிலும் அனுப்பப்படும். உஸ்பெகிஸ்தானின் மத்திய பகுதியிலுள்ள நெடுஞ்சாலை வழியாகவும், கஜகஸ்தான் வழியாகவும் ரஷியாவுக்கும் கொண்டு செல்லப்படும். இந்த சூழலில், கிர்கிஸ்தான் எல்லை கடந்த ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்தி, கடலுடன் இணையும் நாடாக மாறும். இது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஒரு மண்டலம் ஒரு பாதை முன்னெடுப்பில் முக்கியமான நடைமுறையாகும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author