அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; பிரதமர் மோடி பேச்சு  

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு கூட்டு முயற்சிகள் உதவும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தின்போது இத்தகையவர்கள் காட்டிய உற்சாகம் மீண்டும் ‘விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைவதற்காகவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மோடி தனது மாதாந்திர மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டும் என்ற தனது சுதந்திர தின அழைப்பை அடுத்து, வாரிசு அரசியல் புதிய திறமைகளை நசுக்குகிறது என்று சில இளைஞர்கள் கூறியதாக தெரிவித்தார்.
மேலும், ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற தன்னுடைய அழைப்பை ஏற்று பலரும் அரசியலுக்கு வர தயாராக இருப்பதை அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author