திருவாதவூர் கோவில்… இந்தத் தலத்தின் ரகசிய வரலாறு தெரியுமா…? 

Estimated read time 0 min read

மதுரை அருகே மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூரில் திருமறைநாதர் கோவில் அமைந்துள்ளது. வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இறைவனை மனமுருக வேண்டினால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஒரு முனிவரின் சாபத்தால் சனி பகவானுக்கு முடக்குவாதம் ஏற்பட்டதாகவும், திருவாதவூரில் உள்ள திருமறைநாதரை வழிபட்டதன் மூலம் அவர் நோயிலிருந்து விடுபட்டதாகவும் தல புராணம் கூறுகிறது. வேதங்களின் பொருளை விளக்கும் இறைவனாகக் கருதப்படுவதால், இத்தல இறைவன் வேதநாதர் என்றும் திருமறைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலில் திருமால், பிரம்மன், அக்னி பகவான், வாயு பகவான், சனீஸ்வரர் உள்ளிட்டோர் வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள அம்பாள் ஆரணவல்லி அம்பிகை, திருமறை நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். பழமையான இக்கோவில் பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மாணிக்கவாசகருக்கு இறைவன் சிலம்பொலி கேட்கச் செய்த தலமாகவும் இது போற்றப்படுகிறது.

இக்கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புப் பெற்றது. மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியைப் பரியாக மாற்றிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் இவ்விழா நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் திருவாதவூர் அமைந்துள்ளது. மதுரை ஒத்தக்கடையிலிருந்து திருமோகூர் வழியாகவும் இக்கோவிலை அடையலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author