சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுய புரட்சி

அரசியல் கட்சியை, ஒரு பெரிய மரத்துடன் ஒப்பிட்டுக் கூறினால், சுய புரட்சியானது, மரத்தண்டின் உட்பகுதியிலுள்ள பிரச்சினையைத் தீர்த்து, மரத்தின் உயராற்றலை நிலைநிறுத்தும் வழிமுறையாகும். சீனாவின் அதியுயர் தலைவர் ஷி ச்சின்பிங், சுய புரட்சி என்ற கருத்தை முதன்முறையாக முன்வைத்துள்ளார்.

சுய புரட்சியில் நான்கு பகுதிகள் உள்ளன. முதலாவதாக, சுய சுத்திகரிப்பு. சீர்கேட்டை நீக்கி, தீய பழக்கவழக்கங்களை அகற்ற வேண்டும். இரண்டாவதாக, சுய மேம்பாடு. குறைபாடுகளைத் தீர்த்து அமைப்புமுறையை முழுமைப்படுத்தி, அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, சுய புதுப்பிதல். பழமையான சிந்தனையை முறியடிக்க வேண்டும். நான்காவதாக, சுய உயர்வு. திறனை அதிகரித்து, நாட்டின் ஆட்சிமுறையின் பொறுப்பை மேலும் செவ்வனே ஏற்ற வேண்டும். புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்கேட்டு எதிர்ப்பு நடைமுறையாக்கம், சுய புரட்சியின் நல்ல மாதிரியாகும்.

நாட்டின் ஆட்சிமுறைக்கு முன், கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டும். கட்சியை ஒழுங்குபடுத்துவது, கண்டிப்பாக இருக்க வேண்டும். நீண்டகாலமாக ஆட்சி செய்யும் கட்சி, ஆபத்துகளைத் தவிர்க்கும் அதேவேளையில், முனைப்புடன் சிதைவடைந்தவற்றை நீக்கும் துணிச்சல் இருக்க வேண்டும் என்ற சுய புரட்சி கருத்து வெளிப்படுத்தப்பட்டது. உலகளாவிய ஆளும் கட்சிகள் எவ்வாறு நீண்டகாலமாக ஆட்சி செய்வது என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இது பின்பற்றக்கூடிய வழிமுறையாகும் என்றார்.  

Please follow and like us:

You May Also Like

More From Author