சீனாவின் ஹாங்காங் தாய்போ பிரதேசத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து தனி ஆணையம் வழங்கிய அறிக்கையை ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசாங்கம் அக்டோபர் 29ஆம் நாள் வெளியிட்டது. இது குறித்து ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீ காசியு, தொடர்புடைய அதிகாரிகளுடன் செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, சட்டத்தின்படி இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு குற்றவியல் பொறுப்பு நடவடிக்க்கை மேற்கொண்டு, தொடர்புடைய அரசு ஊழியர்களின் குறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும். அத்துடன், தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் அரசியல் பொறுப்பேற்க வேண்டும் என தீர்மனிக்கப்பட்டுள்ளதாக லீ காசியு இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு படிப்பினையைப் பெற்று, தலைவர்களின் பங்கு மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் என்றும், அவர் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசுக்குத் தலைமைத் தாங்கி, பிரச்சினைகளைத் தீர்த்து, சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் மேற்கொண்டு, இது போன்ற விபத்துகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் லீ காசியு கூறினார்.
