கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைப் பணியில் ஊன்றி நிற்பது பற்றிய தீர்மானம் CPC முழு அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு கூட்டம் அக்டோபர் 26முதல் 29ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைப் பணியில் ஊன்றி நிற்பது பற்றிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழு இந்தக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட பொது அறிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் முக்கிய உரைநிகழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த முழு அமர்வில், கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் பணிகள் பற்றி ஷிச்சின்பிங் வழங்கிய அறிக்கை கேட்டறியப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறையில் ஊன்றி நிற்பது தொடர்புடைய முக்கிய பிரச்சினைகள் பற்றிய தீர்மானம் இந்த முழு அமர்வில் பரிசோதனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த தீர்மான வரைவு குறித்து ஷிச்சின்பிங் விளக்கம் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author