சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டு திடீரென விபத்துக்குள்ளானது.
நாட்டில் சமீப காலமாக ரயில் விபத்துகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் சதி வேலைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை அருகே கவரப்பேட்டை பகுதியில் ரயில் விபத்து நடந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தற்போது ரயில் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மதுரை அருகே தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடைசி பெட்டி மட்டும் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.