சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பணி குறித்து முக்கிய உத்தரவிட்டார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான லட்சியம், கட்சி மற்றும் நாட்டின் லட்சியத்தின் முக்கிய பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பணியில் கட்சியின் தலைமை பன்முகங்களிலும் வலுவடைந்து வருகிறது.
மகளிர் மற்றும் குழந்தைகளின் உரிமை நலனுக்கான உத்தரவாத அமைப்புமுறை முழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கான சூழ்நிலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதில், மகளிர் மற்றும் குழந்தைகள் முக்கிய ஆற்றலாக உள்ளனர். மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பணியாளர்கள் ஆரம்ப குறிக்கோளில் ஊன்றி நின்று, மேலும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, இந்த லட்சியத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு புதிய பங்காற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
7வது சீன மகளிர் மற்றும் குழந்தைகளுகான பணிக்கூட்டம் செப்டம்பர் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு இக்கூட்டத்தில் கற்றுக்கொள்ளப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், தலைமையமைச்சருமான லீ ச்சியாங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார்.