தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் 6 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 8ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
குறிப்பாக நாளை ( அக்.4) முதல் 8ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களிலும், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளிலும் ஒரிரு இடங்கள் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வனிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அந்தவகையில், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.