பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இதைத் தொடர்ந்து இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுவதால் பிரதமர் மோடி குஜராத் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, நாடுகள் பிரிந்து செல்கிறது. ஆனால் இந்தியாவை நெருங்கி வருகிறது. இது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது. புதிய வரலாறு எழுதப்படுகிறது. இந்தியா தங்களுடைய பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்பதை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. எனவே நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்.
இந்தியாவின் எழுச்சியை நினைத்து சில வக்கிர சக்திகள் கவலைப்படுகிறது. அந்த சக்திகள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நிலையற்ற தன்மை மற்றும் அராஜகத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இவர்களின் இலக்குகள் பெரும் சக்திகள். அவர்களை குறிவைத்து அவதூறு பரப்புகிறார்கள். ஏழு இந்தியா மற்றும் பலவீனமான இந்தியா போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு பொருந்துவதால் அதனை பயன்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பவில்லை என்றும் அரசியல் அமைப்பின் பெயரால் இந்தியாவின் ஒற்றுமையை உடைக்க பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.