ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியைத் தவிர, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பிவி சுனில் குமார், பிஎஸ்ஆர் சீதாராமஞ்சநேயுலு, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆர் விஜய் பால், குண்டூர் அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஜி பிரபாவதி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார் சென்ற மாதமே ஈமெயில் மூலம் பெறப்பட்டதாகவும், சட்ட ஆலோசனை பெற்றபின்னர் நேற்று இரவு வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது