ஸ்ரீ கல்கி கோவிலுக்கு அடிக்கல் நாட்ட அழைப்பு விடுத்தமைக்காக ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் சம்பால் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்கல் நாட்டு விழாவானது பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த கோவில் வழிபாட்டுத் தலமாகவும், கலாச்சார மரியாதைக்குரிய இடமாகவும், இந்தியாவின் பல்வேறு ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியதாகவும் திகழும்.
இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு ஆச்சார்யா பிரமோத் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19-ம் தேதி ஸ்ரீ கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்ட செல்கிறார்.
இது குறித்து பாரத பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடைய இந்தப் புனிதமான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அழைப்பிற்காக ஆச்சார்ய பிரமோதுக்கு மனமார்ந்த நன்றி.” என பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரதமரின் வருகைக்காக அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றவுள்ளது.