உலகளாவிய ஜவுளி விநியோக மையமாக விளங்கும் அண்டை நாடான பங்களாதேஷின் அரசியல் கொந்தளிப்பால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், இந்திய ஆடை ஏற்றுமதி 8.5% உயர்ந்துள்ளது. இதற்கு மாறாக கடந்த ஆண்டு இதே காலத்தில் 15% சரிவு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 17.3% அதிகரித்துள்ளது.
பங்களாதேஷின் ஆடைத் தொழிலில் ஏற்பட்ட இடையூறு, குறிப்பாக அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதிகள், சர்வதேச வாங்குபவர்களை மாற்று சப்ளையர்களைத் தேட வழிவகுத்தது.