சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்த நிலையில் பின்னர் விலை குறைந்தது.
கடந்த இரு தினங்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 58,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15 ரூபாய் வரையில் குறைந்து 7355 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேப் போன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 7860 ரூபாய்க்கும், ஒரு சவரன் 62, 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 105 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 105000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.