வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அனுப்பியதாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
வரும் 2034-ஆம் ஆண்டுவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.