சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.55,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஓவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ57,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ஒரு சவரன் ரூ56,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,360க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.55,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.55,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹2,720 குறைந்து குறிப்பிடதக்கது.