பெருவில் ஒளிபரப்பப்படும் ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சி

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெரு நாட்டு அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, லிமாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதி, உள்ளூர் நேரப்படி நவம்பர் 14ஆம் நாள் தொடங்கி, பெரு நாட்டின் பல முக்கிய ஊடகங்களில் ஸ்பானிஷ் மொழியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சிக்குப் பெரு நாட்டின் பல்வேறு துறையினர் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் ஆட்சிமுறை பற்றிய சீன அரசுத் தலைவரின் சிந்தனை, சீன நவீனமயமாக்கம் ஆகியவற்றை பெரு மக்கள் அறிந்து கொள்வதற்கு இது வாய்ப்பை வழங்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author