ஒவ்வொரு மனிதருக்கும் சகிப்புத்தன்மை மிக மிக அவசியம் – ஜி.கே.மணி பதிவு

Estimated read time 1 min read

சகிப்புத்தன்மை உள்ள மனிதனை பெருந்தன்மை உடையவன் ஆவான் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நவம்பர் 16 உலக சகிப்புத்தன்மை தினம். சகிப்புத்தன்மை உள்ள மனிதனை பெருந்தன்மை உடையவன் ஆவான் என கூறப்படுகிறது. மனிதனின் அன்பு, அடக்கம், பரிவு, இரக்கம், உண்மை, எளிமை, நேர்மை, மதிப்பளித்தல், பொறுமை, ஒற்றுமை, சகோதரத்துவம், கருணை, மனிதநேயம் உள்ளிட்ட வாழ்வியல் நன்னெறிப் பண்புகள்ன் அடிப்படையே சகிப்புத்தன்மை. சகிப்புத்தன்மைக்கு முதலாவது எடுத்துக்காட்டானவர் மகாத்மா காந்தியடிகள். மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினை, நெருக்கடிகள், ஆனவம் போன்ற சூழ்நிலைகளால் சகிப்புத்தன்மை நிலை மாறுகிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மை காப்பது வாழ்வியல் வெற்றிக்கு வழிவகுக்கும். மற்றவர்களின் சுதந்திரத்தை பரித்தல், அடிப்படை உரிமை இழக்கச் செய்தல், கருத்துக்கு மதிப்பளிக்காமை, மனதை புண்படுத்துதல், இழிவாக நடத்துதல் அடிமைப்படுத்துதல், கலாச்சாரத்தை இழிவு செய்தல், தீங்கிழைத்தல் போன்ற எதிர்மறை காரணிகள் சகிப்புத்தன்மையை சிதைத்து விடும்.

எதிர்வரும் பிரச்சனைகளை, நெருக்கடிகளை, துயரங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தாலே சகிப்புத்தன்மையில் வாழ்வில் வேறூன்றி நிலைத்த பெருமையை கொடுக்கும். நாமும் வாழ வேண்டும், மற்றவர்களும் வாழ வேண்டும், மற்றவர்களின் நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும், கலாச்சாரத்தையும் புரிந்து கொள்வது சகிப்புத் தன்மையின் ஒரு அங்கம். ஒவ்வொரு மனிதருக்கும் பொறுமையின் அடையாளச் சின்னமான சகிப்புத்தன்மை மிக மிக அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author