சீன-பிரேசில் அரசுத் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 20ஆம் நாள் காலை பிரேசில் அரசுத் தலைவர் லுலாவுடன் பிரேசிலியாவிலுள்ள அரசுத் தலைவர் மாளிகையில் சந்திப்பு நடத்திய பிறகு இருவரும் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர்.


அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீன-பிரேசில் உறவின் 50ஆண்டு கால வளர்ச்சிப் போக்கை நாங்கள் கூட்டாக நினைவு கூர்ந்தோம். இரு நாட்டுறவின் எதிர்கால வளர்ச்சி குறித்து நெடுநோக்கு ரீதியில் புதிய ஒத்த கருத்துகளை நாங்கள் எட்டினோம் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், நெடுநோக்கு ரீதியிலுள்ள ஒன்றுக்கொன்று நம்பிக்கையைத் தொடர்ந்து ஆழமாக்கி இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி முதலிய மைய பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரவளித்து தத்தமது நாடுகளின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்.

பொருளாதாரம், நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அடிப்படை வசதிக் கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய முக்கிய துறைகளிலுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டுமென நாங்கள் ஒருமனதாகக் கருதுகின்றது. ஐ.நா, 20நாடுகள் குழு, பிரிக்ஸ் நாடுகள் முதலிய பலதரப்பு அமைப்பு முறையில் சீனாவும் பிரேசிலும் நெருக்கமாக ஒருங்கிணைந்து பட்டினி, வறுமை, பிரதேச மோதல், காலநிலை மாற்றம், இணைய பாதுகாப்பு முதலிய பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற துறைகளிலுள்ள பாதுகாப்பு அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும். உலக அமைதி மற்றும் வளர்ச்சி லட்சியத்துக்குப் சீன-பிரேசில் புதிய பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.


பிரேசிலுடன் இணைந்து, புதிய யுகத்திற்கேற்ப, இரு நாட்டு பொது எதிர்கால சமூகத்தின் உள்ளடக்கத்தைத் தொடர்ந்து செழுமைப்படுத்தி உண்மையான பலதரப்புவாதத்தை உறுதியாகப் பேணிக்காக்கச் சீனா விரும்புகிறது. வறுமைக்கு மாறாக, வளர்ச்சியை எட்ட வேண்டும். எதிர்ப்புக்கு மாறாக, ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். மேலாதிக்கத்துக்கு மாறாக, நியாயத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்ற குரலைக் கூட்டாக எழுப்பி மேலும் அருமையான உலகத்தைக் கூட்டாக உருவாக்க விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
படம்: XINHUA

Please follow and like us:

You May Also Like

More From Author