இந்திய தொழிலதிபர் அதானி முக்கிய தற்போது நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
அதாவது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்காமல் ஏமாற்றியதாக அதானி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதாவது சோலார் எனர்ஜி ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை முதலீட்டாளர்களுக்கு தெரியாமல் அதானி மறைத்ததாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இவர் மீது அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றுதல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இவர் மீது மட்டுமின்றி அவருடைய உறவினரான சாகர் அதானி, சிரில் கபாடினெஸ் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து அதானி கிரீன் லிமிடெட் நிறுவனம் 175 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த புகாரின் பெயரில் தான் தற்போது நீதிமன்றம் அதானிக்கு பிடிவாண்டு பிறப்பித்துள்ளது