ரஷ்யா- உக்ரைன் போர் புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று வெளியான ஒரு அறிக்கையில், உக்ரைன் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தது.
உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்கள் சாத்தியமான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளுக்குத் தயாராகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடையும் என்ற அச்சத்தின் மத்தியில், நவம்பர் 20 அன்று எதிர்பார்க்கப்படும் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் குறித்து கிடைக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கையைத்தொடர்ந்து, கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தது.
“மிகவும் எச்சரிக்கை காரணமாக, தூதரகம் மூடப்படும், மேலும் தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக தங்குமிடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக விவகாரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.