உக்ரைன் போர் காரணமாக, காலாவதியான நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களை இரண்டு வாரங்களுக்குள் வெளியேறுமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யர்களால் நடத்தப்படும் வணிகங்கள் சட்டவிரோதமாக இயங்குவது மற்றும் உள்ளூர் மக்களை அனுமதிக்காத “வெள்ளையர்கள் மட்டும்” கொள்கையுடன் செயல்படுவது குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி, இரண்டு வாரங்களுக்குள் இலங்கை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இலங்கையின் சுற்றுலா அமைச்சரவைக்கு, குடிவரவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாqக அதிகாரிகள் மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான PTI செய்தி வெளியிட்டுள்ளது.