நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பள்ளிப்பருவ காதலர் அந்தோணியை திருமணம் செய்யவுள்ளார்.
கோவாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த திருமண நிகழ்வில் நடிகர் விஜயும் கலந்துகொள்ளவுள்ளார்.
அவர் திருமண வீட்டாருடன் பட்டு வெட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் திருமணம் நடைபெறும் இடத்தில் இருந்து முதல் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷும் அந்தோணியும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வருகின்றனர்.
கீர்த்தியின் திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியான போதும், கடந்த மாதமே அவர் இதனை உறுதி செய்தார்.
அந்தோணி துபாயில் ஹோட்டல்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரை பற்றிய மற்ற விவரங்கள் பெரிதாக வெளியே தெரியவில்லை.