இரு தரப்புகளின் கலந்தாய்வின் படி, காலநிலை பிரச்சினைகளுக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி ஜூலை 16ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டின் நவம்பர் திங்கள் பாலி தீவு பேச்சுவார்த்தையில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைச் செயல்படுத்துவது, காலநிலை மாற்றத்தின் உலகளாவிய அறைகூவல்களை ஒத்துழைப்புடன் சமாளிப்பது ஆகியவை குறித்து காலநிலை மாற்றத்திற்கான சீனாவின் சிறப்பு தூதர் சீயே ஜென்ஹுவா, ஜான் கெர்ரியுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
இப்பேச்சுவார்த்தையின் போது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் தத்தமது கொள்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் அறிமுகப்படுத்தினர்.
எரியாற்றல் மாற்றம், உலகளாவிய பசுமைசார் தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி, குறைந்த கார்பன் மற்றும் பூஜ்ஜிய கார்பன் தொழில்நுட்பம், முறையான ஒத்துழைப்பை முன்னேற்றுவது ஆகியவை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதோடு, இது தொடர்பாக நெருங்கிய தொடர்பைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர்கள் கலந்தாய்வு நடத்தினர்.