தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு ஒரு புதிய மதிப்பீட்டு மாதிரியை பரிந்துரைத்துள்ளது.
முன்மொழியப்பட்ட அமைப்பு, “கல்வி வாரியங்கள் முழுவதும் சமத்துவத்தை நிறுவுதல்” என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான ஒட்டுமொத்த செயல்திறன் அளவீடுகளை பள்ளி இறுதி வகுப்பான 12ஆம் வகுப்பு முடிவுகளில் இணைக்க பரிந்துரைக்கிறது.
NCERT-யால் நிறுவப்பட்ட ஒழுங்குமுறை மையமான PARAKH இந்த ஆண்டு ஜூலை மாதம் கல்வி அமைச்சகத்திடம் இந்த திட்ட அறிக்கை சமர்ப்பித்தது.