நாடு முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை ஈடு செய்யும் பொருட்டு டிசம்பர் 28-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.