கனடாவின் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கனடாவின் வளர்ச்சிப் பாதையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், நாட்டின் நிதி வருவாயைக் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், ட்ரம்பின் அச்சுறுத்தலை மிகப்பெரிய சவால் என்றும் தெரிவித்துள்ளார்.