சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 5ஆம் நாள் பெய்ஜிங்கில் கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவைச் சந்தித்துரையாடினார்.
இரு தரப்பும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பை உயர் தரத்தில் கூட்டாக கட்டியமைப்பதை முக்கிய கடமையாக்கி ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் ஒத்துழைப்பை இடைவிடாமல் முன்னேற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். மேலும், கிர்கிஸ்தான் தரப்புடன் இணைந்து ஒருங்கிணைப்பை நெருக்கமாக்கி எல்லை கடந்த மின் வணிகம், பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு முதலிய புதிய தர உற்பத்தித் திறன் ஒத்துழைப்புகளை விரிவாக்கச் சீனா விரும்புவதாகவும், மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிர்கிஸ்தான் மற்றும் சீனாவின் நட்புறவுக்கு நீண்டகால வரலாறு உள்ளது என்றும், கிர்கிஸ்தானின் நம்பக நண்பர் மற்றும் கூட்டாளியாகச் சீனா திகழ்கிறது என்றும் ஜபரோவ் கூறினார்.