பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு : சீனா

பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு : சீனா

பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கையை, சீனா ஜனவரி 23ஆம் நாள் வெளியிட்டது.


பயங்கரவாத எதிர்ப்பு, சர்வதேச சமூகத்தின் பொது பொறுப்பாகும். பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை உருவாக்கத்துக்கு சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது.

சொந்த நாட்டு நிலைமைக்குப் பொருந்திய பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை சீனா தேடி கண்டறிந்து, தேசிய பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, மக்களின் உயர் மற்றும் சொத்து பாதுகாப்பு ஆகியவற்றைப் பெரிதும் பேணிக்காத்து, உலக மற்றும் பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பங்காற்றியுள்ளது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மேலும், மனிதகுலப் பொது எதிர்கால சமூகம் என்ற கண்ணோட்டத்தின் வழிகாட்டலுடன் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவும், சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற அடிப்படையில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும் சீனா உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author