இயேசு பிரானின் தத்துவத்தை ஏற்று நமது அமைப்புகளும் நிறுவனங்களும் செயல்படுவதாக கிறிஸ்துமஸ் தின விழாவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லியில் கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, குழந்தை இயேசுவின் சொரூபத்துக்கு மலர்தூவி வழிபாடு நடத்தினார். பின்னர், ஆன்மிக இசைக் கச்சேரியை அவர் கண்டு ரசித்தார். நிகழ்ச்சியில், கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, போர் பாதித்த ஆப்கானிஸ்தானில் சிக்கிய கிறிஸ்தவ போதகர் அலெக்சிஸ் பிரேம் குமார் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டதை நினைவு கூர்ந்து, உலகில் எந்த மூலையில் இந்தியர்கள் சிக்கித் தவித்தாலும் அவர்களை மீட்டுக் கொண்டு வருவோம் என சூளுரைத்தார்.
மேலும், வன்முறைக்கு எதிராக சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.