அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இருதரப்பு ஒற்றுமையும் நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே இல்லை. தமிழ்நாட்டுக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை. விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிபண்டபத்தை நானும், ஜிகே மணியும் பார்வையிடுவோம். அதற்கான நேரம் குறிக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் கிடைத்ததுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை மன்னிக்க முடியாது. கடுமையான தண்டனையை அரசும், காவல்துறையும் பெற்றுத்தர வேண்டும். அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு பாதுக்காப்பானவை என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டுகளில் விக்கிரவாண்டி, தஞ்சாவூர், உள்ளிட்ட 963 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை பயன்பாட்டு வரவுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் எந்த இடத்திற்கும் சுங்க கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியாது என்ற நிலை உருவாகிவிடும். விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடி அமைப்பது, கட்டனனத்தை உயர்த்துவது, காலவதியான சுங்கச்சாவடியில் பனம் வசூல் செய்வது மக்களை சுரண்டும் செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுக 40 சுங்கச்சாவடிகளை 19ஆக குறைப்போம் என சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் மூன்று ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் எந்த சுங்கச்சாவடியும் மூடப்பட்டவில்லை. மேலும் புதிதாக 24 சுங்கச்சாவடிகள் திறக்கப்படவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 26ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி எண்ணிக்கையை குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவர்களை நேர்காணல் மூலம் நியமிப்பதை ஏற்க முடியாது. சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நேர்காணல் மூலம் தேர்வு செய்தால் ஊழலுக்குதான் வழிவகுக்கும். கடந்த காலத்தில் இதனை எதிர்த்த ஸ்டாலின் தற்போது அதையே செய்வது நியாயம் இல்லை. எனவே போட்டிதேர்வுகள் மூல நியமிக்க அரசு முன் வர வேண்டும்” என்றார்.