திருநெல்வேலியில் முடிவுற்ற ரூ.1,679 கோடி திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ரூ.180 கோடி மதிப்பிலான புறவழிச்சாலை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும், முடிவுற்ற 23 திட்டப் பணிகளையும் துவக்கி வைத்தார். திருநெல்வேலியில் முடிவுற்ற ரூ.1,679 கோடி திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,061 கோடியில் தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம் தொடங்கி வைத்தார். வேளாண் & உழவர் நலத் துறை சார்பில் கட்டப்பட்ட ரூ.77.02 கோடி மெகா உணவு பூங்காவை திறந்து வைத்தார்.
முன்னதாக நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். ரோடு ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்புஅளித்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற முதல்வர், தன்னை வரவேற்க நின்றிருந்த மாணவ, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.