வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி… மக்களின் மனதை வென்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் – எல்.முருகன் புகழாரம்!

Estimated read time 0 min read

வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி… மக்களின் மனதை வென்றவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், சினிமாவில் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, மக்கள் தொண்டாற்ற அரசியலில் அடியெடுத்து வைத்து, தேர்தல் களம் புகுந்து, தமிழக முதலமைச்சராக பதவியேற்று, தமிழக மக்களின் மனங்களை வென்றெடுத்த பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் இன்று.

இந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன். உழைக்கும் மக்கள், பழங்குடி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் விவசாயிகள், மீனவர்கள்,பெண்கள், காவல்துறையினரை போற்றும் விதமான கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடித்து அதனை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தவர். திரைப்படங்கள் மூலம் உயர்ந்த கருத்துகளை எடுத்துக் கூறி மக்கள் மனங்களை கவர்ந்தவர்.

அரசியல் களத்தில் திமுகவின் கபட நாடகங்களை தோலுரித்துக் காட்டியவர். பிரிவினைக் கருத்துக்களையும் இந்து விரோத எண்ணங்களையும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதவர். ஏழை மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த எம்ஜிஆர் அவர்கள் அந்த மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்தவர். நலத்திட்டங்கள் மற்றும் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பு காரணமாக மக்களின் மனதில் நீங்காத தலைவராக இன்றளவும் இடம் பெற்றிருக்கிறார். தமிழக மக்களின் மனங்களை வென்ற அந்த மாபெரும் தலைவருக்கு அவரது நினைவு நாளில் எனது இதய பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author