தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற உள்ளது.
இதில் தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் மொத்தம் 7,93,986 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 08/2024, நாள் 20.06.2024-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி-2 & 2 ஏ பணிகள்) அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (ஓஎம்ஆர் முறை) முதனிலைத் தேர்வு 14.09.2024 அன்று முற்பகல் நடைபெறவுள்ளது.