ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஷ்ணுப்பாலாமு மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார் .
அப்போது ஒவ்வொரு மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற பிரதமரின் தொலை நோக்கு பார்வைக்கு இது சிறந்த உதாரணம் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.