சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த செவ்வாய் கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் புதன் கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.57,080க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.56,560க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி சனிக்கிழமை விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் 7,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.99 ரூபாய்க்கும், ஒரு கிலோ 99,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.