திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்ததால் அவரை சந்தித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் எனது 38 ஆண்டு கால நண்பர் என்றும், எங்கள் நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என தெரிவித்தார்.
ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தது வருத்தம் அளித்தது என்றும், எனவே தான் அவரை நேரில் சென்று சந்தித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் நான் கூட்டணி குறித்து பேசியதாக செய்திகள் வெளியானது என்றும், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். அந்த அளவிற்கு நான் தரம் கெட்ட ஆள் இல்லை என்றும் அவர் கூறினார்.
விஜய் முதலமைச்சர் ஆனதில் பொறாமை இல்லை என்றும், அவர் வெற்றி பெற்றவுடன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தாக அவர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்யாத சாதனையை விஜய் செய்துள்ளார் என்றும், அவரை ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முதல்வர் விஜய்யை மக்கள் தொந்தரவு செய்யக் கூடாது என்றும், தவெக தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும், அவர்களின் செயல் ஒவ்வொன்றும் விஜய்யை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2001-ல் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன் என்றும் நடிகர் ரஜினி குறிப்பிட்டார்.
