லெசோதோ வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுக்கான அமைச்சர் லெஜோனேவின் அழைப்பையேற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 2026ஆம் ஆண்டு ஜனவரி 10, 11ஆம் நாட்களில் லெசோதோவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் நட்பு சூழலில் பேச்சுவார்த்தையை நடத்தி இரு நாட்டுறவு, சீன-ஆப்பிரிக்க உறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறி கொண்டனர். சீன-லெசோதோ உறவின் வளர்ச்சியில் காணப்பட்ட சாதனைகளை இரு தரப்பும் வெகுவாகப் பாராட்டினர். இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல விரும்புவதாக அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். மேலும், மைய நலன் மற்றும் முக்கிய கவனம் செலுத்தும் பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரவளிக்க இரு தரப்பினரும் ஒருமனதாகத் தீர்மானித்தனர்.
ஒரே சீனா எனும் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பதை லெசோதோ மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனாவும் ஆப்பிரிக்காவும் கைகோர்த்து கொண்டு நவீனமயமாக்கல் முன்னேற்றுவிக்கும் 10 பெரிய கூட்டாளி நடவடிகைகளில் ஈட்டியுள்ள முக்கிய சாதனைகளை இரு தரப்பும் வெகுவாகப் பாராட்டின. நெருக்கமான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி ஒரு தரப்புத் தடை, பாதுகாப்புவாதம் மற்றும் பொருளாதார கொடூரத்தைக் கூட்டாகப் புறக்கணிக்க விரும்புவதாகவும், சமத்துவம் மற்றும் ஒழுங்கான உலக பலதுருவம், அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டையும் அனைவருக்குமான முன்னேற்றத்தையும் கூட்டாக முன்னெடுக்கும் பொருளாதார உலகமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாகவும் இரு தரப்பினரும் கூறினர்.
