சீனாவின் அரசுக்கு சொந்தமான தானிய இருப்பு நிறுவனங்கள் நடப்பாண்டில் விவசாயிகளிடமிருந்து சுமார் 420 மில்லியன் டன் தானியங்களை கொள்வனவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தானிய கொள்முதல் அளவு 40ஆயிரம் கோடி கிலோவுக்கு மேல் இரண்டாவது ஆண்டாக இருப்பதை குறிக்கிறது என்று சீனத் தேசிய உணவுகள் மற்றும் பொருட்கள் சேமிப்பு பணியகம் டிசம்பர் 26ஆம் நாள் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
தானிய சந்தை நிதானமாக இயங்குவதோடு, நாட்டின் சேமிப்பு மற்றும் அவசர ஆதரவு திறனும் மேலும் வலுவடையும் என்றும், இது, பொருளாதாரத்தின் தரமான வளர்ச்சிக்கு வலிமை மிக்க ஆதாரம் அளிக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.