வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள், சிறுவர் நீச்சல் குளம் போன்றவை உள்ளன.
இந்நிலையில் இங்கு வார விடுமுறையையொட்டி உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூரில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அப்போது அருவியில் வழக்கத்தை விட அதிகமாக கொட்டிய நீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.