போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் பூமிக்கு திரும்புவது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது.
ஒரு வாரம் மட்டுமே என ஆரம்பத்தில் திட்டமிட இந்த விண்வெளி பயணத்தின் தற்போதைய அறிக்கையின்படி, போயிங் ஸ்டார்லைனர் கேப்சூலில் விண்வெளிக்கு பறந்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களும் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை அங்கேயே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க நாசா விஞ்ஞானிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் இந்த திட்டமிடப்படாத தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள இரண்டு விண்வெளி வீரர்களும் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.