தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பட்டியல் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை உள்ள திருத்தங்களை மேற்கொண்டு அந்த பட்டியலை ஜனவரி 2ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவு வெளியாகி உள்ளது.
இந்த தேர்வை எழுதும் மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விடுபட்ட மாணவர்களின் பெயர்களை சேர்க்கவும், மாற்று சான்றிதழ்களை பெற்ற மாணவர்களின் பெயர்களை நீக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கும் நிலையில் அன்றைய தினத்திற்குள் இந்த பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.