தஞ்சை தமிழ் பல்கலைக்கழக 14வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர். என்.ரவி மாணவர்களுக்கு பட்டஙகளை வழங்கினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கிராமப்புறங்ளை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள், மாற்றுத்திரனாளி மாணவர்கள், மூன்றாம் பாலின மாணவர்கள் என 656 மாணவ – மாணவிகளுக்கு, ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
அதனைத்தொடர்ந்து சிறந்த மதிப்பெண்களை பெற்ற 8 மாணவர்களுக்கு தங்கப்பதக்கத்தையும் அவர் வழங்கினார். விழாவில் இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.