ஜார்ஜியாவின் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற மிகைல் கவேலாஷ்விலிக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அண்மையில் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், தற்போது, சீன-ஜார்ஜியா நெடுநோக்கு கூட்டாளி உறவு ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது.
இரு தரப்புகளுக்கிடையில், ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை வலுப்பட்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் செழுமையான சாதனைகளைப் பெற்று, சர்வதேச ஒத்துழைப்பு முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது என்றார்.
மேலும், சீன-ஜார்ஜியா உறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளித்தேன். அரசுத் தலைவர் மிகைல் கவேலாஷ்விலியுடன் முயற்சிகளை மேற்கொண்டு, இரு நாட்டுப் பாரம்பரிய நட்புறவை வளர்த்து, இரு தரப்புகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவின் மேலும் பெரும் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.