இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் ஆர்.சி.இ.பி எனும் பிரதேச பன்முக பொருளாதார கூட்டாளி உறவு உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த மூன்றாவது ஆண்டு நிறைவாகும்.
இந்த உடன்படிக்கையின் சாதனை, இந்த உடன்படிக்கையின் மீதான சீனாவின் எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 3ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில்,
உலகில் மிக அதிகமான மக்களின் பங்கெடுப்பு, மிக பெரிய பொருளாதார மற்றும் வர்த்தக அளவு மற்றும் வளர்ச்சிக்கான உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டுள்ள தாராள வர்த்தக உடன்படிக்கை இதுவாகும். ஆசிய-பசிபிக் பிரதேசப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டுக்கு வலிமைமிக்க இயக்காற்றலை இது வழங்கி, இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட உறுப்பு நாடுகளுக்கு சந்தை வாய்ப்புகளைக் கொண்டு வந்து, பலதரப்புவாதத்தின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வின்படி, 2030ஆம் ஆண்டு வரை, இப்பிரதேசத்தில் உள்ள நாடுகளுக்கு 24 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டாலர் பொருளாதார அதிகரிப்பைக் கொண்டு வந்து, 28 லட்சம் வேலை வாய்ப்புகளை இது வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த உடன்படிக்கையை சீனா தொடர்ந்து பன்முகங்களிலும் உயர் தரமாகவும் நடைமுறைப்படுத்தி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் தாராள வர்த்தகத்தின் தரம் மற்றும் நிலையை உயர்த்துவதை முன்னேற்றி, கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமையை நனவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.