புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான சீனத் தூதருக்கு சீன மற்றும் இந்திய செய்தி ஊடகங்களின் கூட்டு பேட்டி

Estimated read time 1 min read

புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் இந்தியாவுக்குச் செல்லும் முன், சி.ஜி.டி.என். மற்றும் பி.டி.ஐ.ஆகியவற்றின் கூட்டு பேட்டிக்கு அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுக்கான சீனாவின் 17ஆம் தூதராக நியமிக்கப்படுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தக் கடமை புகழ்பெற்றது மற்றும் புனிதமானது என்றும் தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் நட்பையும் முன்னேற்றவும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரு நாட்டுறவை மேம்படுத்தவும் முயற்சிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி கூறுகையில், இந்திய-சீன உறவு மிகவும் முக்கியமானது என்றும், நீண்டகாலமாக நிலவுகின்ற எல்லைப் பிரச்சினை, அவசரமாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து சூ ஃபெய்ஹோங் கூறுகையில்,

சீன-இந்திய உறவு பற்றிய தலைமையமைச்சர் மோடியின் நிலைபாட்டை கவனித்துள்ளேன். கடந்த ஆகஸ்ட் திங்கள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், இரு நாட்டு உறவுகளுக்கான முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டதாக இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் தெரிவித்தனர். உரிய முறையில் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும், எல்லைப் பகுதியின் அமைதியைக் கூட்டாக பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர் என்று தெரிவித்தார்.

எல்லைப் பிரச்சினையானது, சீன-இந்திய உறவுகளுக்கான முழு பகுதி அல்ல. நட்பு மற்றும் ஒத்துழைப்பைப் பொருட்படுத்தாமல், கருத்து வேற்றுமைகளை மட்டும் கூர்ந்து பார்க்க கூடாது. இரு நாடுகளின் வளர்ச்சியும் இரு நாட்டு உறவுகளுக்கான ஒட்டுமொத்த நிலைமையும் பாதிப்பு அடைய கூடாது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2014ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.

2020ஆம் ஆண்டு ஜுன் திங்களில் எல்லை பகுதியில் சண்டை ஏற்பட்ட பின், தூதாண்மை மற்றும் இராணுவத் துறைகளில் இந்தியாவுடன் சீனா தொடர்பு மேற்கொண்டு வருகின்றது. எல்லைப் பகுதியின் மேற்கில் உள்ள 4 இடங்களில் இரு நாட்டு இராணுவங்கள் பின்னேறுவது நனவாகியுள்ளன.

தற்போது இரு நாட்டு எல்லை பகுதியின் பொது நிலைமை நிலையானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது. பேச்சுவார்த்தை மூலம் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து இரு தரப்புகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு வெகுவிரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம்.

தவிர, இந்தியாவும் சீனாவும் அண்டை பகுதிகளிலும் பிறப் பிராந்தியங்களிலும் அதிகமாக நெடுநோக்கு ரீதியிலான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலைமையில், இரு தரப்பு உறவு எப்படி முந்தி செல்ல வேண்டும்? எனும் கேள்விக்குப் பதிலளித்தபோது, இரு நாடுகளும், ஒத்துழைப்பு ரீதியிலான பங்காளிகள் ஆகும், பேட்டியாளர்கள் அல்ல என்பதை, இரு நாட்டு தலைவர்களும் எட்டியுள்ளனர்.

சீனாவும் இந்தியாவும், ஒன்றுக்கொன்று வளர்ச்சி வாய்ப்புகளாக இருக்க வேண்டும் என்பதும், அச்சுறுத்தலாக அமையக் கூடாது என்ற ஒத்த கருத்தை அவர்கள் எட்டியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சிக்கான அடிப்படை வழிகாட்டியாக இது அமைய வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author