சீனா-ஜெர்மனியின் ரகசிய சாம்பியன்ஸ் மன்றக் கூட்டம் 2025 அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
3 நாள்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழில்துறை சங்கிலி மீள்தன்மை, கொள்கை அணுகல் மற்றும் புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் சீன சந்தையில் முதலீடு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் பலரால் வலியுறுத்தப்பட்டனர். நிறுவன நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உட்பட சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 600 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஜெர்மன் பாராளுமன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஹான்ஸ்-பீட்டர் பிரீட்ரிக், சீனாவில் முதலீடு செய்யாதது ஆசியாவின் பரந்த பிராந்திய சந்தைக்கான முதன்மை அணுகலை இழப்பதாகும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, மாற்றத்தின் காற்று வீசும்போது, சிலர் சுவர்களைக் கட்டுகிறார்கள், மற்றவர்கள் காற்றாலைகளைக் கட்டுகிறார்கள். குறிப்பாக மாற்றத்தின் போது, கூட்டாக அதிக “காற்றாலைகளை” உருவாக்கவும் பகிரப்படக் கூடிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும் சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.