கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தொடர்பான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் *Umagine TN* தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் தனது உரையில்,”இந்த மாநாடு தமிழ்நாட்டின் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. மின் வாகன உற்பத்தி, புதிய தொழில்நுட்ப முன்னெடுப்புகளில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது” என்றும் கூறினார்.
கோவையில் வரப்போகுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பூங்கா
