சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 21ஆம் நாள் பெய்ஜிங்கில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் காணொளி வழியாக உரையாடினார்.
முதலில், இரு நாட்டு அரசுத் தலைவர்களும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
ஷிச்சின்பிங் கூறுகையில், புதிய ஓராண்டில், புதினுடன் இணைந்து, தொலைநோக்கு பார்வையுடன் சீன-ரஷிய உறவின் வளர்ச்சிக்கு வழிகாட்டி, இரு நாட்டு உறவின் நிலைப்புத்தன்மை மற்றும் உறுதித்தன்மையைக் கொண்டு வெளிப்புற சூழலில் உள்ள உறுதியற்ற காரணிகளைச் சமாளிக்கவும், இரு நாடுகளின் செழுமையான வளர்ச்சியை கூட்டாக முன்னெடுக்கவும் விரும்புவதாக தெரிவித்தார்.
புதின் கூறுகையில், ரஷியாவும் சீனாவும் எப்போதும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் ஆதரவு அளித்து, சமத்துவமான அணுகுமுறையை நடத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புகள், இரு நாட்டு மக்களின் நலன்களுக்குப் பொருந்தியதாக உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரம், வர்த்தகம், எரியாற்றல் ஆகிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி வருகின்றதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.